விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வி.ஜே மணிமேகலை திடீரென விலகிய சம்பவம் ரசிகர்களிடத்தே பரபரப்பை ஏற்றப்படுத்திது. அது தொடர்ப்பில் பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி டீமுடன் மணிமேகலை இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி ஷோ விஜய் டிவியில் ஆரம்பித்த நாள் முதல் அடுத்து அடுத்து வந்த அணைத்து சீசன்களும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. வி.ஜே ரக்ஷன் தொகுத்து வழங்க முன்னைய சீசன்களை வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு நடுவர்களாக இருந்தனர். கோமாளிகளாக விஜய் டிவி புகழ், சிவாங்கி, பாலா, ராமர் உள்ளிட்ட சிலரும், ஒவ்வொரு சீசனுக்கும் புதிய குக்குகளாக பிரபலங்களும் வந்தனர். கலகலப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த சீசன் 5ல் இருந்து பிரியங்கா தனக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இடையூரு செய்கிறார் என்று கூறி திடீரென மணிமேகலை விலகிவிட்டார். அதன் பின்னர் அவர் தனது யூடுப் தளத்தில் போட்ட வீடியோவிற்க்கு பலரும் பலவாறு கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அது தொடர்பில் பிரியங்கா இதுவரையில் எதுவும் பேசவில்லை.
தற்போது இந்த பிரச்சினை கொஞ்சம் அடங்கி உள்ளது. இந்நிலையில் இணையத்தில் மணிமேகலை குக் வித் கோமாளி டீமுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் kpy புகழ், பாலா, தர்ஷா குப்தா, மணிமேகலை ஆகியோர் மொட்டை மாடியில் இருந்து புகைப்படமெடுத்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் மணி,பால வருகிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படத்தினை பகிர்ந்த புகழ் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம். இது விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவிட்டுள்ளார்.
Listen News!