• Dec 24 2024

மீனாவின் ஒரு வார்த்தையால் வீட்டை விட்டு வெளியேறிய முத்து.! விஜயாவுக்கு நெருங்கும் ஆபத்து

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா காலையில் கண்விழ்த்து பார்க்கும் போது முத்துவை காணவில்லை. இதனால் மொட்டை மாடி, கிச்சன் என எல்லா இடத்திலும் தேடிக் கொண்டுள்ளார். அதன் பின்பு முத்துவுக்கு போன் பண்ணவும் அவர் கால் ஆன்சர் பண்ணவில்லை.

இதனை ஸ்ருதியிடம் சொல்லி ஃபீல் பண்ண, அவர் முத்துக்கு சவாரி வந்திருக்கும். அதனால் நேரத்துக்கு போயிருப்பார் என்று சமாதானம் சொல்லுகின்றார். அதன் பின்பு அங்கு வந்த விஜயா என்ன சாப்பாடு செய்யப் போகிறாய் என்று மீனாவை வறுத்தெடுக்கின்றார். இதை பார்த்த ஸ்ருதி எப்படித்தான் இவ்வளவு பொறுமையாக இருக்கின்றீர்களோ... என்னால் இப்படி எல்லாம் இருக்க முடியாது என்று சொல்லுகின்றார்.

d_i_a

இதைத்தொடர்ந்து முத்துவுக்கு மீண்டும் போன் பண்ணி பார்க்கின்றார் மீனா. ஆனாலும் அவர் ஆன்சர் பண்ணவில்லை. இதனால் நேராக கார் செட்டுக்கு சென்று அங்கு செல்வத்திடம் விசாரிக்கின்றார். அவர் கால் பண்ணவும் முத்து ஆன்சர் பண்ண வில்லை. இதனால் முத்து போன் எடுத்தால் தனக்கு கால் பண்ணுமாறு சொல்லிவிட்டு செல்கின்றார் மீனா.


இன்னொரு பக்கம் விஜயா பார்வதி வீட்டுக்குச் செல்லும் போது அங்கு பார்வதி விஜயாவின் உக்கிரதேவி புகைப்படத்தை வைத்து பூஜை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து கோவப்பட்ட விஜயா அவற்றையெல்லாம் கழட்டி எரிந்து.. இதை பாரு.. இது எனது போட்டோ தான்.. அந்த பணக்கார பைத்தியம் செய்த வேலை என்று திட்டுகின்றார். அதன் பின்பு மனோஜ் வீடு வாங்கிய விஷயத்தையும் எல்லாம் ரோகிணி வந்த நேரம் தான் என்றும் சொல்லி பெருமைப்படுகின்றார்.

மேலும் தான் கொஞ்ச நாளைக்கு அங்க போய் இருப்பதாக சொல்ல, அப்படி என்றால் இங்கு எப்படி கிளாஸ் எடுப்பாய் என்று கேட்க, அவர்களை அங்கே வரச் சொல்வேன் என்று கதைத்துக்கொண்டிருக்க, அங்கு இருந்த காதல் ஜோடி நாம கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணனும்... டான்ஸ் கிளாசுக்கு வர முடியவில்லை என்றால் நாம சந்திக்க முடியாது என்று அவர்கள் திருமணம் செய்து கொள்ள பிளான் பண்ணுகின்றார்கள்.

இதைத் தொடர்ந்து இறுதியாக மீனா சத்யாவுக்கு போன் பண்ணி மாமாவை காணவில்லை வருமாறு அழைக்கின்றார். அதன் பின்பு இருவரும் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியிடம் சென்று விசாரிக்க,  அவர்கள் முத்து காலையில் எங்களுக்கு உணவு வாங்கி தந்து தான் போனதாக சொல்கின்றார்கள். இவ்வாறு இரவு பொழுது ஆகியும் முத்துவை காணவில்லை என்று மீனா வருத்தப்படுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement