சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் இல், அண்ணாமலையை தேடி போலீஸ்காரர் ஒருவர் வீட்டுக்கு வருகின்றார். அதற்கு விஜயா முத்து என்ன தப்பு செய்தான் என்று பதறுகின்றார். ஆனாலும் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணியதால் அது பற்றிய விவரங்கள் எடுப்பதற்கு வந்துள்ளதாக போலீஸ்காரர் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் பிரவுன்மணியும் அங்கு வர போலீசை பார்த்ததும் பதறுகின்றார். இதன்போது இவர் யார் என்று கேட்க, அவர் பதில் சொல்ல முடியாமல் இருக்கின்றார். அதற்கு ரோகிணி இது என்னுடைய மாமா என்று உள்ளே அழைக்கின்றார். போலீஸ்காரர் போனதும் பிரவுன் மணி ரோகிணியின் அப்பாவை ஜெயிலுக்குள் வைத்து கொன்றுவிட்டார்கள் என்று சொல்லுகின்றார். இதை கேட்டு ரோகிணி அழுது புலம்பி நாடகமாக ஆடுகின்றார்.
மேலும் அவரை ஹார்ட் அட்டாக் வந்தது என்று ஜெயிலில் வைத்தே எல்லா காரியத்தையும் முடித்து விட்டார்கள். நீங்க அவருடைய முகத்தை கூட பார்க்க முடியாத நிலை என்று சொல்ல, நான் மலேசியாவிற்கு போகவேண்டும், அப்பாவை பார்க்க வேண்டும் என்ற நாடகமாடுகின்றார் ரோகிணி. இதையெல்லாம் நம்பி விஜயாவும் அழுகின்றார். மேலும் அண்ணாமலை மலேசியா ட்ரிப்பை கேன்சல் பண்ணுமாறு சொல்லுகின்றார்.
இதை தொடர்ந்து முத்து மீனாவிடம் இந்த விஷயத்திலும் ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது. நாங்கள் மலேசியா போவதாக சொன்ன இரண்டாவது நாளே அவர்களுடைய அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லுகின்றார்கள். பாலரம்மா ஏதோ ஒரு பெரிய உண்மையை மறைக்குது என்று சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் விஜயா பார்வதியிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க, அங்கு மீனாவின் எதிரியான சிந்தாமணி விஜயாவிடம் டான்ஸ் பழகுவதற்கு வருகின்றார்.
மேலும் விஜயாவை புகழ்ந்து தள்ளி அவருக்கு பரதநாட்டியம் ஆடி காட்டுகின்றார். இதனால் விஜயா அவரை டான்ஸ் கிளாசில் சேர்ப்பதாக சொல்லுகின்றார். மேலும் தான் திருமண மண்டபத்தில் அலங்காரம் செய்யும் வேலையை பார்ப்பதாக சொல்ல, மீனா பற்றிய விஷயத்தையும் பார்வதி சொல்லுகின்றார்.
ஆனால் விஜயாவுக்கு மீனா பிடிக்காது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கின்றார். இதனால் விஜயாவை வைத்து மீனாவை பழிவாங்க திட்டம் போடுகின்றார் சிந்தாமணி.
இதை அடுத்து ரோகிணியின் கனவில் மீனாவுக்கு எல்லா விடயமும் தெரிந்து அவர் வீட்டில் சொல்ல வருவது போலவும், ரோகிணி கத்தியை எடுத்து மிரட்ட இறுதியில் மீனா அவரை கழுத்தில் வைத்து மிரட்டுவது போலவும் கனவு கண்டு கதற, அருகில் இருந்த மனோஜ் அவரை அனுப்பி தண்ணீர் கொடுக்கின்றார். அதன் பின்பு உங்களுடைய அப்பா தான் வந்திருப்பார் என்று கட்டிலுக்கு அருகில் செருப்பை வைத்து தூங்குகின்றார்.
இறுதியாக வித்யாவிடம் தான் கண்ட கனவை சொல்லுகின்றார் ரோகினி. அந்த நேரத்தில் ரோகிணியின் அம்மா வருகின்றார். மேலும் அவர் தனது உண்மையான அப்பாவின் புகைப்படத்தை கொண்டு வருமாறு சொல்ல, ரோகினியின் அம்மாவும் அந்த போட்டோ உடன் வந்துள்ளார். இதான் இன்றைய எபிசோட்..
Listen News!