• Jan 23 2025

விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட Exclusive Stills.. பார்க்கவே பத்திக்கிச்சே..

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா மற்றும் அர்ஜுன் கூட்டணியில் வெளியான படம் தான் மங்காத்தா. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இதனால் இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகின்றது.

மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் லைக்கா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுனுடன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான சவதீகா பாடல் ஹிட் அடித்த நிலையில் விடாமுயற்சி படத்தின் டிரைலர் மற்றும் பத்திக்கிச்சு பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 


விடாமுயற்சி படத்தின் வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம் 800 திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஜித்குமார் சமூக வலைதள பக்கங்களில் இல்லாவிட்டாலும் அவர் தொடர்பிலான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் கோட் சூட் அணிந்து அஜித் குமார் திரிஷாவுடன் வெளியிட்ட புகைப்படங்கள் கடும் வைரலானது. அதேபோல குட் பேட் அக்லி படத்தில் இளமையாக நடிக்கும் அஜித்குமார் புகைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியான புதிய ஸ்டில்ஸ் இதோ,

Advertisement

Advertisement