• Jan 14 2025

சூப்பர் ஸ்டாரின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம்! இந்த விருதும் அவருக்கு தானா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில்  சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான்  நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பான் இந்திய படமான ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிகளை கடந்து சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அவரின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் ஒன்றை பாரிஸில் உள்ள க்ரெவின் மியூஸியம் வெளியிட்டுள்ளது.


இவ்வாறு இந்த பெருமையை பெற்ற முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக்கான் பெற்றுள்ளார். தற்போது இந்த தகவல் படு வைரலாக பரவி வருகின்றது.

மேலும் அடுத்த மாதம் நடைபெற உள்ள லோகார்னோ திரைப்பட விழாவில்  ஷாருக்கானுக்கு பெருமைமிகு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement