• Oct 26 2024

1100 கோடிகளை வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்த கல்கி.. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், உலகநாயகன் கமலஹாசன் மற்றும் அமிதாபச்சன், தீபிகா படுகோன், துல்கர்  சல்மான், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பல பிரபலங்களில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கல்கி 28 98 ஏடி.

இந்த திரைப்படம் சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரானது. கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியான இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்று முதல் நாளிலேயே 191.5  கோடிகளை  வசூலித்திருந்தது.

இந்த நிலையில், கல்கி 28 98 ஏடி திரைப்படம் உலக அளவில் 1100 கோடியை வசூலை பெற்று சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரவூர்வமாக அறிவித்துள்ளது. இதனை தற்போது படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.


ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 1500 கோடிகளை வசூலித்து இருந்தது. ஆனாலும் சலாம் திரைப்படம் 650 கோடிகளை வசூலித்தது.

இவ்வாறு கல்கி திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளது என்றாலும் இந்த திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடி கொண்டு தான் உள்ளது. இதனால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என படக் குழுவினர் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement