• Dec 26 2024

திருமணம் முடித்து புது வீட்டுக்கு போன இந்திரஜாவுக்காக காத்திருந்த ஸ்பெஷல் கெஸ்ட்! பாசிட்டிவ் -Vibe.. கார்த்திக் எமோஷனல்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ள போதும், அது தொடர்பிலான வீடியோக்களும், புகைப்படங்களும் இன்னும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்திரஜா தனது தாய்மாமனான கார்த்திக் என்பவரைகடந்த 24ம் திகதி  திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் மதுரையில்  கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் நடந்த திருமண ரிசப்ஷனில்  பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

இவர்களது திருமணத்திற்கு கமல், நயன்தாரா, சூரி, ஏ. ஆர் ரகுமான் ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளதோடு சுமார் 25 லட்சம் மதிப்புள்ள வைரக்கல் பதிக்கப்பட்ட ரோலக்ஸ் வாட்ச், போக்கே, வெள்ளி, தங்கம் என விலையுயர்ந்த பொருட்களையும் இவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளனர்.


இந்த நிலையில், திருமண கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு, இந்திரஜா தான் வாழப்போகும் வீட்டிற்கு சென்றதோடு, அங்கு வந்துள்ள புது கெஸ்ட் பற்றிய வீடியோ ஒன்றையும் ரொம்ப மகிழ்ச்சியாக தனது சேனலில் வெளியிட்டு உள்ளார்.

அதாவது, இந்திரஜா - கார்த்திக் திருமணத்திற்கு பின்னர் தாம் வாழப்போகும் வீட்டைக் காட்டிய தம்பதியினர் அங்கு ஒரு புது கெஸ்ட் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

அது என்னவென்றால், இந்திரஜா சமைக்கும் அறையில் புறா ஒன்று வந்து போவதற்கு உரிய இடம் காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் புறாவிற்கு உணவு, தண்ணீர், தங்குமிடம் என எல்லாவற்றையும் செய்து கொடுத்துள்ளார் கார்த்திக்.


குறித்த வீடியோவில் புறா ஒன்று வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள கார்போர்ட் பெட்டியில் இருப்பதும், சாப்பிடுவது, முட்டை இட்டுள்ளது என்பவற்றை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

மேலும் இவ்வாறு புறாக்கள் வருவது சந்ததி பெருக்கத்தை குறிக்கும். இது நல்ல பாசிட்டிவ் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement