• Dec 26 2024

ஈஸ்வரியிடம் பேயாட்டம் ஆடிய ராதிகா.. மூஞ்சில கரியை பூசிக் கொண்ட கோபி!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கோபி கிச்சனுக்கு பாக்கியா தமது ரெஸ்டாரண்டில் இருந்து சாப்பாடு கொண்டு போய் கொடுக்க, கோபியும் ஈஸ்வரியும் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்கள். ஈஸ்வரி வேற இடத்தில் ஓடர் பண்ண தான் இருந்தோம் ஆனா நீ பாவம் என்று தான் உனக்கு ஓடர் தந்த என்று சொல்ல, நீங்க எனக்கு பங்சனுக்கு தானே சமைக்க சொன்னிங்க என பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் கோபியின் வேலைக்காரர் ஒருவர், யாருக்குமே  சமைக்க தெரியல நீங்க தான் கடவுள் மாதிரி வந்து காப்பாத்தினீங்க என உண்மையை உடைக்கிறார். 


இதை தொடர்ந்து பாக்கியா கொண்டு போய் கொடுத்த ஓடருக்கு பணம் கேட்க, பிறகு தாரதாக கோபி சொல்ல, பணம் கெடைச்சிடும் தானே என்று பாக்கியா கேட்க, அவர் கோவத்தில் உள்ளே சென்று விடுகிறார். ஈஸ்வரியிடம் பணம் கிடைச்சிடும் தானே என்று கேட்க, இன்னும் அவர்கள் காண்டாகுகிறார்கள்.

இதை தொடர்ந்து, வீட்டுக்கு வந்த பாக்கியா கிச்சனில் இருந்து செல்வி,அமிர்தா, ஜெனி, எழிலுக்கு நடந்தவற்றை சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு வந்த ராதிகாவிடம் உண்மையை உளறுகிறார் செல்வி.

இதைக்கேட்டு கோவத்தில் சென்ற ராதிகா, இன்டைக்கு எப்படி சாப்பாடு செய்து அனுப்பினீங்க என கோபியிடம் கேட்க, அவர் அம்மாவும் நானும் சேர்ந்து செய்ததாக பொய் சொல்லுகிறார். இதைக் கேட்டு கண்டபடி ராதிகா திட்டியதோடு, ஈஸ்வரியிடம் ஏன் இப்படி செய்திங்க என கேள்வி கேட்க, நீ அவன் கால் பண்ணும் போது என்ன செய்தா? ஒரு பொண்டாட்டியா அவனுக்கு ஹெல்ப் பண்ணியா என பதிலடி கொடுக்கிறார்.

மறுப்பக்கம், பாக்கியாவும், எழிலும் கிச்சனில் இருக்க, அங்கு கோபி தண்ணீர் எடுக்க வருகிறார். ஆனாலும் பாக்கியாவை வம்பு இழுக்க, நான் வாழவே மாட்டேன் என்று சொன்னவங்களுக்கு உதவற அளவுக்கு வளந்து இருக்கன் என கோபிக்கு பதிலடி கொடுக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement