• Dec 26 2024

ராஷ்மிகா பர்த்டேவை முன்னிட்டு ஸ்பெஷலாக இறங்கிய போஸ்டர்! களைகட்டும் ஸ்ரீவள்ளி கேரக்டர்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த 2021ஆம் ஆண்டு புஷ்பா முதல் பாகம் வெளிவந்தது. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அல்லு அர்ஜுனின் கெரியர் பெஸ்ட் திரைப்படமாக புஷ்பா முதல் பாகம் அமைந்துள்ளது. 

புஷ்பா முதல் பாகத்தின் சாதனையை புஷ்பா இரண்டாம் பாகம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வரவேற்பை பெற்றது.

மேலும், புஷ்பா முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் அதன் ஓடிடி உரிமையை பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.


அதேபோல, புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தது.


இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இன்றைய தினம் தனது  28-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவரின் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது புஷ்பா 2 படக்குழு.

குறித்த போஸ்டரில், ஒற்றைக் கண்ணில் கை வைத்த படி, கை நிறைய வளையல், கழுத்து நிறைய நகைகள், இரண்டு மூக்குத்தியோடு, பச்சை நிற புடவையில் இதுவரை யாரும் பார்த்திராத ட்ரெஷ்னல் கெட்டப்பில் ராஷ்மிகா மந்தனா உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வரைலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement