• Apr 08 2025

சிறகடிக்க ஆசை: கல்யாணம் ஆனதுதான் கஷ்டமா இருக்கு ! அதிர்ச்சி கொடுத்த மீனா தங்கச்சி!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு டிவி சீரியல்கள் ட்ரெண்டிங் ஆக காணப்படும் என்று கூறலாம். அவ்வாறே சமீபத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். TRP ரேட்டின் உச்சத்தில் இருக்கும் இந்த நாடக தொடரில் நடிக்கும் நடிகை அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து மற்றும் மீனா ஆகிய இரண்டு காதல்ஜோடியின் கதைகளையும் , அவர்களது வாழ்க்கை பயணம்  ,குடும்பத்தினரினால் வரும் பிரச்சனை , வியாபார போட்டியினால வரும் வில்லன்கள் என சுவாரசியமாக கதை நகரும் இந்த நாடகத்தில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவர்  "கல்யாணம் ஆகியது போல் நடிப்பது கடினமாக உள்ளது" என கூறியுள்ளார்.


குறித்த சீரியலில் நடிக்கும் இவருக்கு இந்த சீரியலில் திருமணமே ஆகவில்லை ஆனாலும் இவ்வாறு இவர் கூறியது பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. அதாவது இவர் விஜயடிவி மட்டுமின்றி சன்டிவியிலும் ஒரு நாடகத்தில் நடித்து வருகின்றார். அதில் ஹீரோவின் தங்கச்சியாக நடிக்கும் இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகளும் உள்ளது போன்ற கதாபாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. குறித்த கதாபாத்திரத்தில் நடிப்பதே கடினமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement