பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இணைந்த ஜோடி அமீர் மற்றும் பாவினி ஒருதலை காதலில் ஆரம்பித்து திருமணத்தில் முடிந்துள்ள இந்த உறவு மிகவும் அழகாக உள்ளது. மிகவும் பிரமாண்டமாக தமது திருமணத்தை முடித்த இவர்கள் தற்போது ஜோடியாக வலம் வருகின்றனர்.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் தமது அழகிய தருணங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாவினி அழகிய சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கான பிரயாணத்தின் போது எடுத்து கொண்டது என பதிவிட்டுள்ளார்.
மேலும் அங்கு "நான் நினைத்தபோது, வாழ்க்கையில் இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. ஹைதராபாத் செல்லும் விமானத்தில் ஏற விமான நிலையத்திற்குத் திரும்பும் வழியில், ஒரு பழைய நண்பரைச் சந்தித்தேன்" என கூறியுள்ளார்.
Listen News!