• Dec 26 2024

தர்ம தேவனே போற்றி போற்றி... கேப்டனுக்காக மாலை போட்டு மலைக்கு போகும் ரசிகபக்த்தர்கள்... நெகிழ்ச்சியான சம்பவம்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகாந்த் மறைந்த செய்தி இன்றளவில் மட்டும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகவே காணப்படுகின்றது. அந்த அளவிற்கு சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் மட்டுமின்றி பாமர மக்களின் இதயம் வரை விஜயகாந்த நீங்கா இடம்பெற்றுள்ளார்.


நடிகராக இருந்து பல நடிகைகளை உருவாக்கி உள்ளார். தலைவராக இருந்து பல மக்களுக்கு உதவி செய்துள்ளார். அதனாலே இன்றளவும் அவர் மறைவை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் மாலை அணிந்து மலைக்கு செல்ல உள்ளனர்.


என்னது விஜயகாந்துக்காக மாலை, விரதம் என அதிர்ச்சியாகும் செய்தியாக இருந்தாலும் கேப்டனின் ரசிகர்கள் குருசாமியான எரியோடு தே.மு.தி.க பேரூர் கழக செயலாளர் சங்கர் முன்னிலையில், தொண்டர்கள் 11 பேர் மாலை அணிந்துகொண்டனர். மேலும் 10 பேர் மாலை அணிந்து சனிக்கிழமை யாத்திரை செல்லவுள்ளனர்.


கடவுளுக்கு நிகராக கேப்டன் புகைப்படத்தை வைத்து காவி உடை அணிந்து தர்ம தேவனே போற்றி போற்றி என நாமம் சொல்லி மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்கு செல்ல உள்ளனர் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. 

Advertisement

Advertisement