• Dec 27 2024

அவர் இவர் இல்லை.. இவருடன் போட்டோ எடுத்தா தப்பா பேசுவீங்களா? நடிகை கங்கனா

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடித்து வரும் நடிகை தான் கங்கனா ரணாவத். 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏராளமான மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் 'தலைவி' என்ற படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இறுதியாக இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவான வரவேற்பைப் பெறவில்லை.


இதே போல ஹிந்தியில் சமீப காலமாக நடிக்கும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. போட்ட பணத்தில் 10 சதவீதம் கூட திரும்ப வரவில்லை என அவரது படங்களை பற்றிய புள்ளிவிவரங்கள் வருகின்றன.

இந்த நிலையில், தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் துளியும் உண்மை இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார் .


மேலும் அவர் கூறுகையில், தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான் தயவு செய்து பொய்யான தகவல்களை பரப்பு வதை நிறுத்துங்கள். 

நிஷாந்த் பிட்டி திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருபவர்..நான் வேறு ஒருவரைதான் டேட்டிங் செய்து வருகிறேன். சரியான நேரத்தில் நான் டேட் செய்துவரும் நபர் யார் என்பதை குறித்து உங்களிடம் கூறுகிறேன்.


ஒரு பெண் தெருவில் ஒரு ஆணுடன் ஒன்றாக நடந்து செல்வதை பார்க்கக்கூடாது. அவர், சக ஊழியர்களாகவும், உடன்பிறந்தவர்களாகவும், பணிபுரியும் நண்பர்களாகவும் இருக்கலாம். 

இளம் பெண்ணை ஒரு புதிய நபருடன் போட்டோ எடுத்த ஒரே காரணத்திற்காக இணைத்து பேசுவது சரியானதல்ல. தயவுசெய்து இதுபோன்ற செயலை செய்யாதீர்கள் என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.



Advertisement

Advertisement