• Jan 07 2025

உச்சகட்ட சந்தோஷத்தில் தனது மகளுடன் ஸ்ரேயா வெளியிட்ட வீடியோ.! செம க்யூட்ல..

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'எனக்கு 20 உனக்கு 18..' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஆக அறிமுகமானவர் தான் ஸ்ரேயா. அதன்பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

அதன்படி அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, இந்திரலோகத்தில் ஞா. அழகப்பன் உட்பட பல படங்களில் நடித்தார். 

d_i_a

இவர் சினிமாத் துறையில்  தொடர்ந்தும்ஜொலித்து வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ரகசியமாக திருமணம் செய்தார். இவருக்கு ஒரு மகளும் உள்ளர்.

கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான கப்ஜா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். தற்போது ஷோ டைம் என்ற டிவி சீரிஸில் நடித்து வருகின்றார் .


சமூக வலைதளங்களில் ஆக்டீவாக  இருக்கம் ஸ்ரேயா அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவார்.  சமீபத்தில் அவர் மாலைத்தீவில் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் செம வைரல் ஆனது.

இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா தனது மகளுடன் செம ஹாப்பியாக இருக்கும் மூமண்டை இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவின் மகிழ்ச்சியை பார்த்து தாமும் மனம் மகிழ்வதாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement