பிரபல நடிகராக விஷால் "மதகஜராஜா" திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடுக்கத்துடன் பேசிய விடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஷாலுக்கு என்னாச்சி என்று ரசிகர்கள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை குஷ்பு சுந்தர். சி விஷால் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் "மதகஜராஜா" திரைப்படம் 2013 ஆம் ஆண்டில் இருந்து வெளியாகலாமல் கிடப்பில் இருந்தது தற்போது தூசி தட்டி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆகா இருக்கிறது. இதனை முன்னிட்டு பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவில் சுந்தர். சி , குஷ்பு, விஜய் ஆண்டனி, விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய விஷால் கை நடுக்கத்துடன் பேசியதை கவனித்த அங்கிருந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக அமர வைத்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஷாலுக்கு காய்ச்சல் இருந்ததாகவும் குளிர் அதிகமாக இருந்ததால் தான் அப்படி நடுக்கமாக காணப்பட்டார் என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் குஷ்பு நடிகர் விஷால் குறித்து மேடையில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் " நண்பன் , பிரன்ஷிப்க்கு ரொம்ப ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறவரு விஷால். நாளைக்கு ஒரு பிரண்ட் வந்து இந்த மலையில் இருந்து குதிங்க விஷால்னு சொன்னா குதிச்சிருவார், கேட்டா அவன் குதிக்க சொன்னான்னு சொல்லுவாரு, திரும்பி ஏன்னு கூட கேட்க மாட்டாரு அந்த மாதிரி ஒரு ஆல் தான் விஷால். இந்த படத்திற்கு பிறகு நிறைய படம் பண்ணாங்க. 3 பேரா இருந்தோம் இடையில என்ன காணோம் இப்போ அது இரண்டு பேர் பிரன்ஷிப்பா மாறிருச்சு" என்று கூறியுள்ளார் குஷ்பு.
Listen News!