• Dec 25 2024

பப்லுவுக்கு புது ரூட்டு போடும் வனிதா..! அச்சச்சோ என்ன இப்படி சொல்லிட்டீங்க? ரசிகர்கள் கிண்டல்பேச்சு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த  24 வயது நிரம்பிய ஷீத்தல் என்பவருடன் உறவில் இருந்தார். 

தன்னை விட 27 வயது குறைவான பெண்ணுடன் பப்லு பிரித்விராஜ் உறவில் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. பப்லு தன் மகனை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஷீத்தலை திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

ஒரு கட்டத்திற்கு மேல் நம்பிக்கை இழந்த ஷீத்தல் சுயநலமாக இருக்கும் உன்னுடன் வாழவே பிடிக்கவில்லை என கூறி அவருடன் சண்டையிட்டு பப்லுவை பிரிந்துவிட்டதாகவும் பப்லுவின் வயது ஷீத்தலுக்கு மிகப்பெரிய சங்கட்டமாக இருந்ததாகவும் வெளிவரும் செய்திகள் கூறுகிறது.


எனினும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள்.

என்னுடைய வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தம். இப்போது தான் எல்லாம் எனக்கு புரிகிறது என தாங்கள் பிரிந்ததை பட்டும் படாமல் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், பப்லு விவகாரம் தொடர்பில் அண்மையில் பேட்டியொன்றில் வனிதா பேசியிருந்தார். அதன்படி அவர் கூறுகையில்,

'27 வயதில் மகன் இருக்கும்போது 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி தேவையற்றது. மகனை அவர் நடு ரோட்டில் விடவில்லை. அவனுக்கு ஒரு அப்பாவாக தன்னுடைய கடமையை செய்துவருகிறார். அவருக்கு வயது வித்தியாசத்தை தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்தது. வாழ்க்கையில், நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நானும், பப்லு மாதிரி பண்ணலாம். அது தனிப்பட்ட விஷயம்' என்று வனிதா பிரித்விராஜுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இதனை கவனித்த ரசிகர்கள், வனிதாவுக்கு பப்லு மேல ஒரு கண்ணு தான் போல, என்ன அடுத்த திருமணத்திற்கு ரெடியா? என கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement