• Dec 26 2024

அர்ச்சனா பற்றி அந்த பொண்ணு சொன்னது சரிதான்! அர்ச்சனா குறித்து புகழ்ந்த அபிநயா!

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ்" நிகழ்ச்சியின் ஏழாவது சீஷனானது சமீபத்தில் நடைபெற்று முடிந்திருந்தது. இதில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டவர் அர்ச்சனா ஆவர். குறித்த இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நடைபெறும் பிக் பாஸ் கொண்டாட்டம் எனும் ரியாலிட்டி சோவானது நடைபெறுவது வழக்கமே.


அந்த வகையில் இந்த சீஷனுக்கான "பிக் பாஸ் கொண்டாட்டம்" நடைபெற்று முடிந்து , இது தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகியும் வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் பல சுவாரசியமான விடயங்கள் நடைபெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக அர்ச்சனாவை அவரது ரசிகர்கள் மேடையில் சந்தித்து பல பரிசில்கள் வழங்கி அவரது வெற்றியை மேடையில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 


அதில் அர்ச்சனாவை சித்திரமாக வரைந்து கொடுத்த ஒரு பெண் ரசிகை "நான் நீங்க அழும்போதுலாம் நானும் அழுவன் எனக்கு உங்கள ரொம்ப  பிடிக்கும் " என கூறியுள்ளார். இது வைரலாகி வரும் நிலையில் நடிகை அபிநயா குறித்த இந்த விடயம் தொடர்பில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.


அதில் அவர் "இது யாருக்கு இருந்தாலும் இருக்கும் நாங்க அழும்போதுலாம் நம்மள யாருனே தெரியாத ஒருத்தர் அழுக்குறது என்றது ஒரு கிப்ட்தான் , அது ப்ரோமோல வந்தது எனக்கு இன்னும் சந்தோசம் 3நாள் அழுதுட்டு வெளிய வரப்போறன் எண்டு சொன்ன அர்ச்சனா குடுத்த அந்த மாற்றம் நிறைய பேருக்கு முன்னுதாரணம் , வாழ்க்கையில் கஷ்டப்படும் போது இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல எழுந்து வா என்பதற்கு இவரே முன்னுதாரணம் "  என  மிகவும் நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளார் அபிநயா.

Advertisement

Advertisement