• Dec 26 2024

விஜய் டிவியில் பிரபலமான மற்றுமொரு சீரியல் நடிகைக்கு ஆக்சிடெண்ட்! கேன்சலான ஷூட்டிங்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரொம்பவும் பாவமாக, அழகாக, எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது மீனாவுடைய கதாபாத்திரம் தான். அதாவது, இந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றவர் தான் நடிகை கோமதி பிரியா.

இவர் தற்போது, தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என நிறைய சீரியல்களில் கமிட்டாகி ரொம்பவும் பிசியாக நடித்து வருகிறார்.


இந்த நிலையில், நடிகை கோமதி பிரியாவுக்கு தற்போது ஆக்சிடென்ட்  ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அதனால் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மலையாளத்தில் இவர் நடிக்கும் சீரியலில், பைக் ஓட்டும் சீன் பண்ணும் போது இவங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆகி உள்ளதாம்.


இந்த ஒரு விஷயத்தினால் அன்னைக்கு மட்டும் ஷூட்டிங் ஸ்பாட் கேன்சல் பண்ணி இருக்காங்களாம்.

இதை அறிந்த ரசிகர்கள், உங்களுக்காக தான் நாங்கள் சிறகடிக்க ஆசை சீரியலை பார்க்கிறோம். தயவு செய்து உடம்பை பார்த்து கொள்ளுங்கள் அப்படி என்று பாசத்தை கமெண்ட்ஸ்ல கொட்டி தீர்த்துள்ளார்களாம்.

இதேவேளை, விஜய் டிவியில் பிரபலமான கம்பம் மீனா செல்லமுத்து நேற்றைய தினம் விபத்தில் சிக்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement