• Apr 18 2026

திடீரென விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. 

இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. கணவன் இல்லாமல் குடும்பத்தை தனது சொந்த செலவில் பார்த்துக் கொள்ளும் தைரியமான பெண் குறித்தே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


தற்போது பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்கள் இரண்டும் மகா சங்கம் என்று சேர்ந்து ஒளிபரப்பாகிறது.


பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியாக நடிப்பவர் தான் கம்பம் மீனா செல்லமுத்து. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் அவர் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தார். இருப்பினும் பாக்கியலட்சுமி தொடரில் அவருக்கு ஹீரோயின் உடனேயே எப்போதும் இருக்கும் பாசிட்டிவ் ரோல் தான்.


இந்த நிலையில், கம்பம் மீனா செல்லமுத்து நேற்று விபத்தில் சிக்கி இருக்கிறார். 

இவ்வாறு அவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, பரிதாபமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement