• Dec 26 2024

ரசிகர்களுடன் சேர்ந்து "ராயன்" திரைப்படத்தை கண்டுகளித்த நடிகர் தனுஷ்.

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான "ராயன்" திரைப்படம் இன்று உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.தனுஷ் நடிகராக தனது 50வது படத்தையும் இயக்குனராக தனது 2வது படத்தையும் "ராயன்" மூலமாக நிறைவு செய்திருக்கிறார்.

Rayan Movie Trailer - businessoftollywood

நடிகர் தனுஷில் ஆரம்பித்து எஸ்.ஜே.சூர்யா , பிரகாஷ் ராஜ் , செல்வராகவன் , சுந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி , வரலக்ஷ்மி சரத்குமார் என நீளும் நடிகர்கள் வரிசை இயக்குனர் தனுஷின் பாத்திரத்தெரிவை தெளிவாக விளக்கியிருக்க படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்துது.

Image

இன்று உலகளவில் வெளியான "ராயன்" திரைப்படம் நேர்மறையான விமர்சங்களை பெற்று தொடர்ந்து திரையரங்கு ரசிகர்களால் நிரம்பி வழியும்  அளவில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுடன் "ராயன்" பெஸ்ட் டே பெஸ்ட் ஷோவை பிரபல திரையரங்கு ஒன்றில் கண்டுகளித்துள்ளார்.இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


Advertisement

Advertisement