• Dec 26 2024

தம்பியின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படும் அண்ணன், செல்வராகவனின் எக்ஸ் தள பதிவு !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் தனுஷ் தனது அடுத்த பரிமாணமான இயக்குனர் பாத்திரத்தை தான் இயக்குனரான முதல் படமான "பவர் பாண்டி" படத்தின் மூலம் சிறந்தது என நிரூபித்திருந்தார். காலங்கள் செல்ல இயக்கம் பற்றிய அறிவிப்புகளை வெளியிடாத தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குவதாக செய்திகள் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது.

Raayan' Movie Review: What's Good, What ...

இவ்வாறிருக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இணைந்த தனுஷின் 50 வது படமான "ராயன்" சன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.இன்று உலக அளவில் வெளியாகி நேர்மறையான விமர்சனகளுடன் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையிடப்படுகிறது "ராயன்" திரைப்படம்.

Dhanush's brother Selvaraghavan denies ...

இந்நிலையில் ராயன் திரைப்படத்தை பார்வையிட்ட தனுஷின் தமயன் இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் தம்பியை பாராட்டி பதிவொன்றை இட்டுள்ளார்.அப் பதிவில் "தனுஷ் நடிகராகவும் இயக்குனராகவும் ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்கிறார் ! உங்களை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன் சகோதரரே! அனைத்து நடிகர்களின் நடிப்பையும் ரசித்தேன் !" என குறிப்பிட்டிருந்தார்.



Advertisement

Advertisement