• Jan 11 2025

"விஷாலுக்கு இப்போது போதாத காலம்.." - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்..

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

மதகஜராஜா படத்தின் நிகழ்வில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் கலந்து கொண்ட நடிகர் விஷால் தொடர்பில் ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தற்போது அனுதாபம் கூறிவருகின்றனர்.இவரை குணப்படுத்தும் வேலையில் அவரது நெருங்கிய நண்பர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்களாம் அதில் குறிப்பாக ஆர்யாவும் முன்னிலையில் இருந்து அவருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றாராம்.


இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி விஷால் தொடர்பில் நேர்காணல் ஒன்றில் பேசிய போது "என்னோட நண்பன் விஷாலுக்கு இப்போது போதாத காலம் கெட்ட நேரம்னு எது வேணா சொல்லலாம். ஆனா விஷாலை விட ஒரு தைரியசாலி கிடையாது. அந்த தைரியம் அவனை காப்பாத்தும் அவன் நிறைய பேருக்கு உதவி செஞ்சி இருக்கான். அவன் நல்ல மனசுக்கு அவன் சீக்கிரம் மறுபடியும் சிங்கம் மாதிரி வருவான்" என கவலையுடன் கூறியுள்ளார்.


இன்னும் விஷால் உடல் நிலை தொடர்பில் அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து எதுவித தகவலும் இன்னும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement