• Dec 26 2024

பிரபல நகைக்கடை மோசடியில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்.. வெளியான பரபரப்பு தகவல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரணவ் ஜூவல்லரி மோசடி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜிடம் தங்கள் விசாரணை நடத்தவில்லை என திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸார் கூறியுள்ளனர் .


திருச்சியை தலைமையிடமாக கொண்டு 7க்கும் மேற்ப்பட்ட இடங்களில் செயல்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லரி நகை நிறுவனம் வாடிக்கையாளரிடம் சீட்டு நடத்தி சுமார் 100கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது .


இந்த வழக்கில் பிரணவ்  ஜூவல்லரியின் உரிமையாளர் மதன் செல்வராஜ் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர் . இவரிடம் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் .


இந் நிலையில் பிரணவ் ஜூவல்லரியின் விளம்பரத்தில் நடித்த   பிரகாஷ்ராஜிடம் விசாரணை நடத்தவில்லை என்றும் அவர் நடித்து  மட்டும் தான் கொடுத்துள்ளதாகவும் அவருக்கு இதில் தொடர்பு இல்லையெனவும் பொருளாதார குற்றப்பிரிவு பொலிசார் கூறியுள்ளனர் .


அமலாக்க துறை அதிகாரிகள் தான்  பிரகாஷ்ராஜிடம் விசாரணை செய்ததாகவும்  பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர் 

Advertisement

Advertisement