• Dec 25 2024

நடிகர் சல்மான்கான் வீட்டில் நடைபெறவுள்ள விஷேசம் 56 வயதில் மறுமணமா?- அதுவும் எந்த பிரபலத்தை தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் சல்மான்கான். பாலிவூட்டில் எப்போதும் சர்ச்சைக்குரிய நடிகராக வலம் வரும் இவர் 57 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகின்றார்.

இருப்பினும் இவர் அடிக்கடி அனைத்து நடிகைகளுடனும் சர்ச்சைகளிலும் சிக்கி வருவதுண்டு.இவரைப் போல இவருடைய சகோதரனான அர்பாஸ் கான் நடிகை மலைக்கா அரோராவை 1998ல் திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அவரை விட்டுப் பிரிந்து விட்டார்.

அதற்கு பிறகு மலைக்கா அரோரா போனி கபூர் மகன் அர்ஜுன் கபூர் உடன் வாழ்ந்து வருகிறார். இன்னொரு பக்கம் அர்பாஸ் கான் Georgia Andriani என்ற நடிகை உடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வந்தார். ஆனால் அவர்கள் சமீபத்தில் பிரேக்கப் செய்துவிட்டனர்.


தற்போது பிரேக்கப் ஆனதை தொடர்ந்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட் Shura khan என்பவர் உடன் அர்பாஸ் கான் அடுத்த ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவரும்  வரும் டிசம்பர் 24ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர் எனவும் பாலிவுட் மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது.

56 வயதில் அர்பாஸ் கான் இரண்டாம் திருமணம் செய்யும் பெண்ணின் வயது அவரை விட மிக குறைவு என்பதால் ரசிகர்கள் கிண்டலடித்தும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement