• Dec 26 2024

வாழ்க்கைல இனி செத்துப் போவது தான் முடிவு- திடீரென கதறி அழும் பிக்பாஸ் தனலட்சுமி- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தா் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் தனலட்சுமி. இவர் அதற்கு முன்பு இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக வைரல் ஆன நிலையில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.


அந்த ஷோவில் 77 நாட்கள் இருந்தார் இவர். அதற்கு பிறகு தனலட்சுமிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.இந்நிலையில் தனலட்சுமி தற்போது கண்ணீருடன் ஒரு வீடியோ இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.


வாழ்க்கையின் முடிவு மரணம் என அவர் குறிப்பிட்டு அந்த பதிவை போட்டிருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். மேலும் பிக்பாஸ் சீசன் 6 இல் தைரியமான போட்டியாளராக இவர் வலம் வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement