• Dec 26 2024

முதல் மனைவி, 2வது மனைவி இருவரையும் ரஜினி வீட்டுக்கு அழைத்து சென்ற சரத்குமார்.. என்ன காரணம்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு தனது விவாகரத்துக்கான முதல் மனைவி மற்றும் தற்போதைய இரண்டாவது மனைவி ராதிகா ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு நடிகர் சரத்குமார் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாரா ஆகிய இருவருக்கும் பிறந்தவர் நடிகை வரலட்சுமி. இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தாய்லாந்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முக்கிய பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வரும் சரத்குமார் குடும்பத்தினர் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து அவருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்தனர். அப்போது ரஜினியும், அவருடைய மனைவி லதாவும் திருமண அழைப்பிதழை பெற்றுக் கொண்டு கண்டிப்பாக திருமணத்திற்கு வருவதாக உறுதி கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது சரத்குமார், அவருடைய முதல் மனைவி சாரா, இரண்டாவது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி உட்பட குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர். ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களை மிகவும் அன்புடன் வரவேற்றதாகவும் திருமணத்திற்கு கண்டிப்பாக வருவதாக உறுதி அளித்து இருப்பதாகவும் நடிகை வரலட்சுமி தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement