• Dec 26 2024

விஜய் டிவிக்கு வருகிறார் விஜய் சேதுபதி.. பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, விஜய் டிவியில் நடைபெறும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்பதும், பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நான்கு சீசன்கள் முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி முதல் ஐந்தாவது சீசன் தொடங்கியது என்பதும் ஐந்தாவது சீசனையும் பிரியங்கா தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஐந்தாவது சீசனின் முதல் நாள் நிகழ்ச்சியில்  நடிகை சிம்ரன் கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் இதனை அடுத்து தொடர்ச்சியாக இந்த சீசன் முழுவதும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் எபிசோடுகளாக மாற்ற சேனல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் விரைவில் விஜய் சேதுபதி கலந்து கொள்ள இருப்பதாகவும் அவரிடம் சம்மதம் பெற்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. சிம்ரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியும் பாடல் பாடியும் அசத்திய நிலையில் அதேபோல் விஜய் சேதுபதியும் அசத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement