அமரன் திரைப்படத்தின் பின்னர் சிவகார்த்திகேயனின் வாழ்கை ஒரு படி மேலே உயர்ந்துள்ளது. சாதாரண ஒரு மனிதனாலும் முன்னேறலாம் என்பதற்கு ஒரு எடுத்து காட்டாக மாறியுள்ளார். தற்போது "பராசக்தி ", மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். ஆரம்பத்தில் ஒரே வகையான காதல் கதைகளை மாத்திரம் தேடி நடித்து வருகின்றார். எனும் விமர்சகர்களை அமரன் மூலம் வாயடைக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் இவரது project இணை பார்த்து அனைவரும் வியந்து வருகின்றனர். அந்த வகையில் அவர் பல முன்னணி இயக்குநர்களுடன் கூட்டணி வைத்து வருகின்றார். இந்த வரிசையில் தற்போது அட்லீ இணைந்துள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் பெரிய இயக்குநர்களை சந்தித்து பேசி வருகின்றார். இவர் ஒரு புது பாணியில் இயக்குநர்களை தேடி செல்கின்றார். சமீபத்தில் அட்லியினை பார்ப்பதற்கு இவர் நேரில் சென்றுள்ளதாகவும் அங்கு புதிய படம் ஒன்று தொடர்பில் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Listen News!