1989 களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று வரை வித்தியாசமான கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடித்து வருகின்றார். 90 களில் வெளியாகிய இவரது நகைச்சுவையான படங்கள் இன்றுவரை அனைவராலும் பார்த்து ரசிக்க வைக்கின்றது.
இவர் 1990 ஆம் ஆண்டு நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபங்களினால் 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போதைய நேர்காணல் ஒன்றில் "சமீபத்தில் கூட என் முன்னாள் மனைவி சீதாவின் அம்மா தவறிட்டாங்க. நான் தான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணுனேன். மறுநாள் கூட எனக்கு நன்றி சொல்லி ஒரு மெசேஜ் அனுப்புனாங்க. இன்னைக்கு எங்க ரெண்டு பேருக்கும் மனசு வருத்தமே தவிர, முன்னாடி இருந்த மரியாதை அன்பு எல்லாம் அப்படியேதான் இருக்கு. அதில் எந்த மாற்றமும் இல்லை" என பேசியுள்ளார்.
Listen News!