• Dec 26 2024

அந்த காதலை மறைக்க ரொம்ப கஷ்ட்டப்பட்டேன்! நாங்கள் எடுத்த முடிவு சரி என்று நினைக்கிறேன்! நடிகர் வருண் தேஜ் பேட்டி!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகனும், நடிகருமான வருண் தேஜ் தன்னுடன் சேர்ந்து நடித்த லாவண்யா திரிபாதியை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் காதலிக்கும் போது அதனை எவ்வளவு பாடுபட்டார் என்பது குறித்து பேசியுள்ளார். 


வருண் தேஜ், லாவண்யாவின் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் பிரமாண்டமாக நடந்தது. முன்னதாக ஜூன் மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. வருண் தேஜும், லாவண்யா திரிபாதியும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.


கடந்த 2017ம் ஆண்டு வெளியான மிஸ்டர் படத்தில் சேர்ந்து நடத்தபோது வருண் தேஜ், லாவண்யா இடையே காதல் ஏற்பட்டது. நடிக்க வந்த வேகத்தில் வருணுக்கும், லாவண்யாவுக்கும் காதல் வந்ததால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள். அதாவது காதலிப்போம் ஆனால் அது யாருக்கும் தெரிந்துவிடாமல் பார்த்துக்கொள்வோம் என்பது தான். காதலை யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பது என்று முடிவு செய்தபோது பேலன்ஸ் பண்ண கடினமாக இருந்தது. திரையுலகில் இருந்து கொண்டு காதலை மறைத்து வைக்க முடியும். 


காதலை ரகசியமாக வைத்திருக்க கஷ்டப்பட்டிருக்கிறேன். நானும், லாவண்யாவும் சந்தித்தபோது இருவருமே கெரியரின் துவக்கத்தில் இருந்தோம். அதனால் காதலித்து ஜோடியாக சுற்றுவதை விட கெரியரில் கவனம் செலுத்துவது தான் முக்கியம் என முடிவு செய்தோம். அதனால் ஆரம்பத்தில் கெரியருக்கு தான் முக்கியத்துவம் அளித்தோம். நாங்கள் எடுத்த முடிவு தான் சரி என்பதை பின்னர் உணர்ந்தோம் என்றார்.


வருண் தேஜும், லாவண்யா திரிபாதியும் காதலிப்பதாக அவ்வப்போது பேச்சு கிளம்புவதும், அடங்குவதுமாக இருந்தது. இருவரும் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததால் ஒரு வேளை காதல் இல்லை போன்று, வதந்தி என்றும் ரசிகர்கள் பேசினார்கள். இந்நிலையில் தான் உண்மையை சொல்லியிருக்கிறார் வருண் தேஜ். மெகா குடும்பத்து மருமகளானபோது லாவண்யா திரிபாதியை ரசிகர்கள் வாழ்த்தினார்கள்.

Advertisement

Advertisement