• Dec 26 2024

2 இட்லி, ஒரு வடையால் ஷூட்டிங் நின்ற கொடுமை.. வளரும்போதே இவ்வளவு அட்ராசிட்டியா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

வளர்ந்து வரும் ஒரு நடிகர், கடந்த சில ஆண்டுகளாக ஒரு வெற்றி படம் கூட கொடுக்காத ஒரு நடிகர், இட்லி மற்றும் வடை இல்லாததால் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று கூறியது தயாரிப்பாளர் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’8 தோட்டாக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் வெற்றி. அதன் பின்னர் இவர் ’ஜிவி’ ’வனம்’ ’ஜோதி’ ’ஜீவி 2’ போன்ற சில படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடித்த ’பம்பர்’ மற்றும் ’ரெட் சாண்டல்’ ஆகிய இரண்டு படங்கள் சுமாரான வரவேற்பு பெற்றது என்பதும் தற்போது அவர் ’இரவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெளிநாட்டு தயாரிப்பாளர் ஒருவரின் படத்தில் நடிகர் வெற்றி நடித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வாரணாசியில் நடந்தது என்றும் அங்கே திடீரென வெற்றி படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று வெற்றி கூறியது படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்ததாக தெரிகிறது.


அதன் பின்னர் அவரிடம் படக்குழுவினர் விசாரணை செய்தபோது தனக்கு காலை உணவாக சப்பாத்தி வந்துள்ளதாகவும், இட்லி வடை இருந்தால் மட்டுமே நான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறியதாகவும் தெரிகிறது. அதன் பின்னர் உதவி இயக்குனர்கள் வாரணாசி முழுவதும் பல இடங்களில் சுற்றி இரண்டு இட்லி ஒரு வடை வாங்கிக் கொண்டு வந்த பின்னர் தான் அதை சாப்பிட்டுவிட்டு அவர் படப்பிடிப்புக்கு வந்ததாக கூறப்படுகிறது.

வளர்ந்து வரும் ஒரு நடிகர், தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு சூப்பர் ஹிட் கூட கொடுக்காத நடிகர், இரண்டு இட்லி ஒரு வடைக்காக படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று கூறியதை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் இந்த தகவல் தயாரிப்பாளருக்கு தெரிந்த போது மிகவும் வருத்தமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement