தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், நடிகராக மட்டுமல்லாது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். அந்தக் கட்டிடம் முழுமையாக நிறைவடைந்த பின்னரே தான் திருமணம் செய்துகொள்வேன் என முன்னதாக அறிவித்திருந்தார்.
தற்போது நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதால், அவரது இந்த நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நடிகர் விஷாலும் நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. .

மேலும், சமீப காலமாக நடிகர் விஷால் தனது உடல் நலன் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். தினமும் ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதோடு, அதற்கான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விஷால் ஜிம்மில் எடுத்துள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து வருகின்றன.
Listen News!