தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரான விமல், தற்போது இயக்குநர் கேத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை ராஜசேகரன் தயாரித்துள்ளார். கதாநாயகியாக நடிகை சங்கீதா நடித்துள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
மேலும் ‘வடம்’ திரைப்படத்தில் நடராஜ் , சனஷ்கா ஸ்ரீ, முனிஷ்காந்த், பால சரவணன், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், தீபா ஷங்கர், இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பல முன்னணி மற்றும் குணச்சித்திர நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான மஞ்சு விரட்டு என்ற காளை விளையாட்டை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமிய வாழ்வியல், பண்பாடு மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளதுடன், சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘வடம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. விமலின் இந்த கிராமிய பின்னணிப் படம் மார்ச் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வெளியான ‘பாண்டிமுனி’ என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திமில் கொண்ட காளையின் வீர ஆட்டம்!
Proudly presenting the #Vadam Trailer ✨ Idhu unmaiya'ana Manjuvirattu sambavam! 🌪️
Get ready for a high-octane rural action drama.
Trailer out now! 🔥
Trailer Link 🔗: https://t.co/4TY0q5wMeJ#VadamFromMarch6th@ActorVemal @sanashka_sri pic.twitter.com/G1G75YqfP2
Listen News!