• Dec 25 2024

கெளதமி மகளின் சினிமா என்ட்ரி.. பிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியா?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகை கௌதமியின் மகள் விரைவில் சினிமாவில் என்ட்ரி ஆக இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் பிரபலமாக இருந்தவர் நடிகை கௌதமி என்பதும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

தற்போது சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தீவிர அரசியலில் கெளதமி ஈடுபட்டு வருகிறார் என்பதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்பு சமீபத்தில் அவர் அதிமுகவில் இணைந்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நடிகை கெளதமிக்கு சுப்புலட்சுமி என்ற ஒரே மகள் இருக்கும் நிலையில் இவர் பட்டப்படிப்பு படித்து முடித்த நிலையில் சமீபத்தில் லண்டன் சென்று நடிப்புக்கான ஆறு மாத கோர்ஸ் படித்தார் என்றும் அதனை அடுத்து அவர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கௌதமி தனது மகளின் பெயரை சினிமாவுக்காக மாற்ற இருப்பதாகவும் விரைவில் அந்த பெயரை அவர் அறிவிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி துருவ் விக்ரம் நடிக்க உள்ள படத்தில் தான் சுப்புலட்சுமி அறிமுகமாக இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்து அறிவித்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் மற்றும் கௌதமி ஆகிய இருவரும் இணைந்து ஒரே ஒரு மலையாள படத்தில் நடித்த நிலையில் தற்போது இருவரது வாரிசுகள் ஒரே திரைப்படத்தில் நடிக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement