• Dec 25 2024

கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிக்பாஸ் குழுவினர்.. காத்திருந்த அதிர்ச்சி..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் குழுவினர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது கமல்ஹாசன் சில அதிர்ச்சியை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் 7 சீசன்கள் முடிவடைந்து 8வது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 7 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கமல்ஹாசனை வரவழைத்த பிக் பாஸ் குழுவினர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் கமல்ஹாசன் தற்போது ’தக்லைஃப்’ உட்பட சில படங்களில் பிசியாக இருப்பதாகவும் அதுமட்டுமின்றி ஏஐ டெக்னாலஜி படிப்பதற்கு அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிரமம் தான் என்று கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் பிக் பாஸ் குழுவினர் கமல்ஹாசனிடம் நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று கூறியபோது, பிக் பாஸ் குழுவினர் எதிர்பார்க்காத ஒரு தொகையை சம்பளமாக கேட்டு கமல்ஹாசன் அதிர்ச்சி கொடுத்ததாகவும் தெரிகிறது

ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமற்றதாக இருக்கும் நிலையில் உறுதி செய்யப்பட்ட ஒரே தகவல் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது தான்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட படப்பிடிப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், செட் அமைக்கும் பணியும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி போட்டியாளர்களை தேர்வு செய்ய ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டு ஆடிஷன் பக்கம் நடந்து கொண்டிருப்பதாகவும், இரண்டாவது வாரம் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோ ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement