• Dec 26 2024

என் 2 மகன்களையும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் வைக்க சொன்னேன்: பிரபல நடிகை பேட்டி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

என் இரண்டு மகன்களையும் தங்களுக்கு பிடித்த பெண்களுடன் லிவ்-இன் உறவில் முதலில் வாழ்க்கை நடத்த சொன்னேன், அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவுரை கூறினேன், அதே அறிவுரையை நான் தற்போது இளைஞர்களுக்கும் கூறுகிறேன், முதலில் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒரு பெண்ணுடன் வாழ முடியுமா என்று பரிசோதனை செய்து கொள்ள லிவ்-இன் உறவு முறை அவசியம்’ என்று பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கலாச்சாரத்தில் லிவ்-இன் உறவு முறை இன்னும் உறுத்துதல் ஆகவே பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் மட்டுமே லிவ்-இன் உறவு முறையை கடைபிடித்து வருகின்றனர் என்பதும் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு தான் பழகி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.



இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஜீனத் அமன் லிவ்-இன் உறவு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ’திருமணத்திற்கு முன்பு ஒரு ஆண் அல்லது பெண் இருவருமே லிவ்-இன் உறவு உறவில் இருப்பது அவசியம். இரு குடும்பங்களையும் உங்களுடன் இணைக்கும் முன்பே நீங்கள் உங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறீர்களா? உங்களுக்குள் ஒத்து வருகிறதா? என்பதை பார்க்க வேண்டும் அவசியம்.

என் இரண்டு மகன்களுக்கும் நான் இந்த அறிவுரையை தான் கூறினேன், அந்த அறிவுரையை இளைஞர்களாகிய உங்களுக்கும் கூறுகிறேன், முதலில் ஒரு லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை வைத்துக் கொண்டு, உங்களால் அதில் வாழ முடியும் என்பதை உறுதி செய்து, அதன் பின் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

இந்தியாவில் இன்னும் லிவ்-இன் உறவு முறை உறுத்தலாகவே பார்க்கப்படுகிறது என்றும் ஆனால் நாளடைவில் இது அனைத்து தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement