• Dec 26 2024

இன்ஸ்டாவில் கவர்ச்சி போட்டோ போட்டால் படுக்க அழைக்கிறார்கள்: புலம்பும் நடிகை..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தால் படுக்க அழைக்கிறார்கள் என பிரபல நடிகை ஒருவர் புலம்பிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்ரம் நடித்தஜெமினிஎன்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர்அன்பே சிவம்’ ’வில்லன்’ ’வின்னர்’ ’அரசு’ ’தென்னவன்’ ’திருமலைஉள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கிரண் ரத்தோட். கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி சொந்தமாக இணையதளம் மற்றும் செயலி வைத்து அதன் மூலம் காசுக்காக கிளாமர் வீடியோக்களை விற்பனை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கிரண் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது இன்ஸ்டாகிராமில் கிளாமர் வீடியோவை பதிவு செய்தால் உடனே படுக்க அழைக்கிறார்கள் என்றும் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னை போல் பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்கிறார்கள், ஆனால் என்னை மட்டும் சிலர் டார்ச்சர் செய்வது ஏன் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

நான் எனக்குப் பிடித்த ஆடையை அணிந்து, எனக்கு பிடித்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக இன்ஸ்டாவில் பதிவு செய்கிறேன், அதற்காக நான் தவறான பெண் என்று எண்ண வேண்டாம், என்னை மீண்டும் ஒருமுறை படுக்கைக்கு அழைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement