• Dec 26 2024

மீடியாக்கள் ஏன் இப்படி மோசமா இருக்குது: பாலா அடித்ததாக பேட்டியளித்த நடிகை ஆவேசம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ என்பவர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும்வணங்கான்திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவர் பாலா தன்னை அடித்ததாக பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பாலா அவர்கள் படப்பிடிப்பின் போது ஸ்ட்ரிக்டாக இருப்பார் என்பது உண்மைதான் ஆனால் அதற்காக அவர் என்னை அடித்தார் என்று நான் பேட்டி கொடுக்கவே இல்லை, நான் கூறிய பல விஷயங்களை அந்த பேட்டியில் ஒளிபரப்பாமல், ஒரு சில விஷயங்களை மட்டும் எடிட் செய்து ஒளிபரப்பி, வதந்தியை பரப்பி உள்ளார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் மீடியாக்கள் ஏன் இப்படி இருக்கிறது என்று தெரியவில்லை, இதனால் தான் பேட்டி கொடுக்கவே தனக்கு பயமாக இருக்கிறது, நான் சொன்னதை முழுவதுமாக ஒளிபரப்பி இருந்தால் அந்த பேட்டியில் நான் பாலாவை பற்றி எந்த அளவுக்கு புகழ்ந்து இருக்கின்றேன் என்று ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.



பாலா உள்பட இயக்குனர் டீம் அனைவரும் என்னை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார்கள், என் மீது மிகுந்த அக்கறை செலுத்தினார்கள், குறிப்பாக பாலா என்னிடமிருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டார், நான் அவருக்கு முழு அளவில் ஒத்துழைப்பை கொடுத்தேன், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மமிதா பைஜூ கூறியுள்ளார்.

பாலா அவர்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக கருதுகிறேன் என்றும் அவர் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்றும் ஒரு காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக நடிகர்களிடம் ஸ்டிரிக்ட் ஆக வேலை வாங்குவதில் தவறு இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement