• Dec 26 2024

முட்டாள்கள் முட்டாள்களாகவே இருப்பார்கள்.. வதந்தி குறித்து மீனாவின் கோபமான பதிவு..

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகை மீனா குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இதற்கு அவர் கோபமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,  விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய், உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை மீனா என்பதும் சமீபத்தில் அவருடைய கணவர் இறந்து விட்டதால் அந்த சோகம் காரணமாக சில மாதங்கள் திரையுலகில் நடிக்காமல்  இருந்த மீனா தற்போது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார் என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நான் சமீப காலமாக மத்திய அமைச்சர் ஒருவருடன் மீனாவை இணைத்து சில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் ஏற்கனவே அவர் சில கோபமான பதிவுகளை செய்துள்ளார். ஆனாலும் வதந்தி தொடர்ந்து கொண்டே இருப்பதை அடுத்து மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு கோபமான பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் ’நான் ஒரு நிலையான உள் போராட்டத்தை அனுபவித்து வருகிறேன், மிகவும் வலியை உணர்கிறேன், ஆனால் நீங்கள் என்னை பார்க்கும் போது நான் நன்றாக இருப்பது போல் தோன்றும் , முகமூடியின் பின்னால் அனைத்தையும் மறைத்து வைத்திருக்கிறேன், வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாகவே இருப்பார்கள், முட்டாள்கள் முட்டாள்களாக இருப்பார்கள்’ என்று தனது வேதனையை தெரிவித்துள்ளதோடு வதந்தி பரப்பியவர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளார்.  மீனாவின் இந்த பதிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement