• Dec 26 2024

அசுர வளர்ச்சியில் முத்து.. வாடகை தாய் மூலம் குழந்தை..?? மீனா போட்ட கண்டிஷன்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , முத்து விஜயாவையும் அண்ணாமலையும் காரில் கோவிலுக்கு கூட்டிச்சென்று மீண்டும் வீட்டுக்கு கொண்டுவந்து வந்து விடுகிறார். இதன்போது அண்ணாமலை நடந்த எல்லாத்தையும் மறந்து விஜயாவிடம் தண்ணீர் கேட்கின்றார். விஜயாவும் சந்தோஷத்துடன் தண்ணீரை கொண்டு வந்து கொடுக்கின்றார்.

இதனால் அங்கிருந்த பாட்டி இனி எப்பவுமே இப்படி சந்தோஷமா இருக்கணும் சண்டை போடக்கூடாது என அட்வைஸ் பண்ணி தான் வீட்டுக்கு கிளம்புவதாக சொல்லி கிளம்புகின்றார்.

இன்னொரு பக்கம் ரவி ஸ்ருதியை பின்னால் இருந்து கட்டி பிடிக்க அவர் தள்ளிவிட்டு என்னை நீ இப்படி எல்லாம் பண்ண கூடாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், நான் குழந்தை பெத்துக்க மாட்டேன் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றார். மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்ல இதற்கு எங்களுடைய வீட்டார் சம்மதிக்க மாட்டாங்க என்று ரவி சொல்லவும், அதை நான் தான் முடிவு எடுக்கணும். என்னால குழந்தை பெத்துக்க முடியாது என்று உறுதியாக சொல்லுகின்றார் ஸ்ருதி.


இதை தொடர்ந்து மனோஜ்  தூக்கம் வராமல் கடதாசியை நினைத்து கொண்டிருக்க, விஜயாவுக்கு போன் போட்டு ஹோலுக்கு வர சொல்லுகிறார். அங்கு நீங்க தானே நகை விஷயத்தில் உங்களை மாட்டி விட்டதால பார்வதி ஆன்டி  கூட சேர்ந்து இப்படி மொட்டை கடதாசி போட்டிங்க என விஜயாவை  சந்தேகப்படுகிறார்.

இதனால் விஜயா நான் உனக்கு இவ்வளவு பண்ணி இருக்க நீ கடைசில என்னையே சந்தேகப்படுறியா? என அவருக்கு திட்டி அடிக்கின்றார். ஆனால் யாரையும் நம்ப மாட்டேன் என லெட்டர் எடுத்துக்கொண்டு செல்கிறார் மனோஜ் .

இதை அடுத்து முத்து வாங்கிய புது காரை தனது நண்பருக்கு வாடகைக்கு கொடுக்கின்றார். இதன்போது அண்ணாமலையிடம் சாவியை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி அவரது நண்பரிடம்  கொடுக்க, மீனாவும் கார் ஓட்டும் போது எந்த கெட்ட பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டாம் என சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement