• Apr 04 2025

சமூக வலைத்தளங்களில் புதிய வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ள நடிகை ஓவியா..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

2010 ஆம் ஆண்டு, தமிழில் சூப்பர் ஹிட்டாக வெளியான "களவாணி" படத்தின் மூலம் நடிகை ஓவியா கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திற்கே பெரும் வெற்றி பெற்ற அவர், அதன் பிறகு "மன்மதன் அம்பு", "முத்துக்கு முத்தாக", "மெரினா", "கலகலப்பு", "சில்லுனு ஒரு சந்திப்பு", "மூடர்கூடம்", "மதயானைக் கூட்டம்", "யாமிருக்க பயமே" போன்ற பல படங்களில் நடித்து வந்தார். இடையில் அவரது அந்தரங்க வீடியோ ஒன்று வைரலாகி பல விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.


மேலும் இவர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு தனக்கு ஒரு பெரும் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவின் பிரபலம் கூடியது. 2019க்கு பிறகு தமிழில் படங்களில் நடிக்காமல் இருந்த ஓவியா தற்போது 2024 இல் "பூமர் அங்கிள்" படத்தில் நடித்து மீண்டும் திரைக்கு வந்துள்ளார். 

மேலும் வெப் சீரியஸ் மற்றும் அடுத்தடுத்து பல புதிய திட்டங்களில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் ஓவியா புதிய படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement