• Apr 08 2025

"கட்டா குஸ்தி 2" படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்த படக்குழு...! ஹீரோ யார் தெரியுமா..?

Mathumitha / 4 days ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளரும் நடிகருமாகிய விஷ்ணு விஷால் தமிழில் நீர்பறவைகள் , ஜீவா ,ராட்ஷசன் ,கட்டாகுஸ்தி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது இவர் ராட்ஷசன் ராம்குமார் இயக்கத்தில் இரண்டு வானாம் எனும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்து வருகின்றார். மேலும் இவர் மோகன்தாஸ் ,ஆர்யன் போன்ற படங்களிலும் மிகவும் பிசியாக நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இரண்டு வானம்  படத்தின் சூட்டிங் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இவர் அடுத்து கட்டாகுஸ்தி 2 படத்தில் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியாகிய கட்டாகுஸ்தி  படம் இவருக்கு பெரிய வரவேற்பினை பெற்று கொடுத்ததை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தின் வேலைகளை உடனடியாக படக்குழு ஆரம்பித்துள்ளது.


மேலும் இரண்டு வானம் படத்தின் டப்பிங் வேலைகள் முடியாத காரணத்தினால் அவர் இடைக்கிடையில் அந்த வேலைகளையும் பார்க்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. மற்றும் பல டிஜிட்டல் நிறுவனத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் விஷ்ணு விஷாலின் நண்பர்கள் என்பதால் பல இயக்குநர்கள் இவரை தேடி செல்வதாக செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement