• Jan 12 2025

விடிவி கணேஷை அடித்து உதைத்த நடிகை ராதா... ரணகளமான குக் வித் கோமாளி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் வெற்றிகரமாக நான்கு சீசன்களை முடித்து தற்போது ஐந்தாவது சீசனில் கால் பதித்திருக்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி.

இந்த சீசனில் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள். இதில் காமெடி நடிகர் விடிவி கணேஷ் கலந்து உள்ளார்.

இந்த நிலையில், இந்த வாரம் வெளியான ப்ரோமோவில் சிக்கனை வைத்து சமையல் செய்ய வேண்டும் என்று டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஸ்பெஷல் கெஸ்ட் ஆக நடிகை ராதாவும் கலந்து கொண்டுள்ளார்.


இந்த நிகழ்ச்சியின் போது விடிவி கணேஷ், தன்னை அம்மா திருமணம் செய்து கொள்ள சொன்ன போது எனக்கு ராதா மாதிரி பொண்ணு வேணும் என கேட்டேன். ஆனால் கேரளாவில் ஏதோ ஒரு ஊரில் ஒரு பெண்ணை பிடித்து கட்டி வைத்து விட்டார்கள் என்று கூறியிருந்தார்.


இதைக் கேட்ட ராதா பிடிவி கணேஷை அடித்து உதைத்து  கலகலப்பாக இருக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement