• Dec 26 2024

நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு! சிசிடிவி காட்சியில் வெளிவந்த உண்மை?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியல் நடிகை ஆன ரேகா நாயர் வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பால கணபதி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் எந்த கருத்தாக இருந்தாலும் பொது இடத்தில் தைரியமாக பேசக் கூடியவர்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தக்க முறையில் குரல் கொடுத்து தட்டிக் கேட்கக் கூடிய நடிகர்களுள் முக்கியமான ஒரு நடிகையாக நடிகை ரேகா நாயர் காணப்படுகின்றார் .

இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார். இவர் அளித்த பேட்டிகளில் சில விஷயங்களை தைரியமாகவே பேசி  இருப்பார். 


இந்த நிலையில், பிரபல சீரியல் நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் சென்னையில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் மார்பில் கார் ஏறி இறங்கிய நிலையிலேயே அவர் படுக்காயமடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து விசாரணையின் போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கண்டெடுத்துள்ளனர். அதில் குறித்த கார் சீரியல் நடிகையான ரேகா நாயருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்பு அவருடைய கார் ஓட்டுநர் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement