• Dec 26 2024

கோபிக்கு சரியான செருப்படி கொடுத்த பாக்கியா.. இனியா கொடுத்த அதிரடி ஐடியா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி ஈஸ்வரியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க, அங்கு வந்த ராமமூர்த்தி என்ன என்று கேட்க, ஈஸ்வரி தான் பழைய மாதிரி பேசுவேன் என எதிர்பார்த்து விட்டான் என கோபிக்கு பல்பு கொடுத்து செல்கிறார்.

ராமமூர்த்தி ஈஸ்வரியை அழைத்துக்கொண்டு செல்லும்போது நான் இப்பவும் சொல்லுகின்றேன் நான் செத்தாலும் அவன் எனக்கு கொள்ளி வைக்க கூடாது என்று சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து பூஜைகள் எல்லாம் நிறைவடைந்து எல்லோரும் குடும்பமாக இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தூரத்தில் இருந்து பார்த்து கோபி கண்கலங்குகின்றார். எழில் போக முயலும் போது, பாக்கியா உடனடியாக எல்லாரும் சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்ல, இனியா தாத்தா கையாலே சாப்பிடலாம் என ஐடியா கொடுக்கின்றார்.

அதன்படி ராமமூர்த்தி கையால் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்க இதை பார்த்து கோபி தூரத்தில் நின்று கண்கலங்குகின்றார். இதன் போது பாக்கியா பாயாசம் எடுத்து வருகின்றேன் என்று கிளம்பி செல்ல, அங்கு வந்த கோபி  என் குடும்பத்தில் இருந்து என்னை பிரித்து விட்டாய் தானே இந்த பாவம் உன்ன சும்மா விடாது எல்லாத்துக்கும் காரணம் நீ தான் என பாக்கியாவை கண்டபடி திட்டுகின்றார்.


அதற்கு பாக்கியா அடுத்தவங்க மீது பழி போடறதுக்கு முதல் நீங்க என்ன செய்தீங்க என்று ஜோசியுங்க. நீங்க எடுத்த முடிவு தான் இதுக்கெல்லாம் காரணம் என்று கோபிக்கு செருப்படி கொடுக்கின்றார்.

இறுதியாக ராமமூர்த்தி எழிலை சந்தித்து வீடு பாத்திட்டியா? எல்லாம் ஒரு நாள் சரியாகும். அம்மாக்கு எப்பையும் நீ துணையாய் இருக்கணும். ஈஸ்வரியை வெறுத்திடாத நீ போன பிறகு அவ ரொம்ப அழுதா என கதைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement