• Dec 25 2024

என் பிள்ளைகள் காதலுக்கு பின் 2வது திருமணம்.. தேர்தலில் வெற்றி பெற்ற நடிகரின் முன்னாள் மனைவி..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகரின் முன்னாள் மனைவி என்னுடைய குழந்தைகளின் காதலுக்கு பின்னர் நான் இரண்டாம் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக பேட்டியில் கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் பவன் கல்யாண் தன்னுடன் நடித்த ரேணுதேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னரே இந்த தம்பதிக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் திருமணத்திற்கு பின் ஒரு மகள் பிறந்தார் என்பதும் சில வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பவன் கல்யாண் மற்றும் ரேணுதேசாய் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

விவாகரத்துக்கு பின் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வரும் ரேணு தேசாய் குழந்தைகளுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்தார். இடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து அதன் பிறகு குழந்தைகளின் எதிர்காலம் கருதி அந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆகியுள்ளனர் என்றும் கல்லூரிக்கு சென்று அவர்களுக்கு என்று ஒரு காதல் ஏற்பட்ட பின்னர் நான் மறுமணம் செய்து கொள்வேன் என்றும் அதுவரை இன்னும் சில வருடங்கள் காத்திருப்பேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகளும் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள் என்றும் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவரை தாராளமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அனுமதி அளித்திருக்கிறார்கள் என்றும் எனவே இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்து நான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement