• Mar 05 2025

"அந்த விஷயத்தை மறக்கவே முடியாது.." உருக்கமாக பேசிய நடிகை சமந்தா..!

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை சமந்தா அவரது நடிப்பின் முக்கியமான படங்களில் ஒன்றான 'யே மாயா சேசவே' பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்த படம் வெளிவந்து 15 ஆண்டுகள் நிறைவு ஆன நிலையில் சமந்தா இப்படம் குறித்து தனது அன்பான நினைவுகளை பகிர்ந்தார்.


மேலும் இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து அவரது முன்னாள் கணவன் நாகசைத்தன்யா இணைந்து நடித்திருந்தமையினால் மிகவும் பீல் பண்ணி பேசியுள்ளார். இவர்களது விவகாரத்தின் பின்னர் மிகவும் மனமுடைந்து போயிருந்தார். நாகசைத்தன்யா சோபிதாவை மறு திருமணம் செய்த பின்னர் இன்னும் அதிகமாக உடைந்து போயிருந்தார்.


தற்போது 'யே மாயா சேசவே' வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் 'யே மாயா சேசவே' படத்தைப் பொறுத்தவரை எனக்கு படத்தின் ஒவ்வொரு ஷார்ட்டும் நினைவிருக்கிறது. குறிப்பாக படத்தின் முதல் காட்சியில் ஜெஸ்ஸியிம், கார்த்திக்கும் வீட்டு கேட் அருகில் சந்திப்பார்கள். அந்தக் காட்சி அனுபவத்தை மறக்கவே முடியாது. அந்த மொமென்டின் ஒவ்வொரு விஷயத்தையும் என்னால் இப்போதும் நினைவுபடுத்த முடியும். அதற்குக் காரணம் கௌதம் மேனன். அவருடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. அவர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார்.' என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement