• Mar 05 2025

சுந்தர்சியுடன் கூட்டணி வைக்கவுள்ள முன்னணி நடிகர்..! யார் தெரியுமா...?

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

12 வருடங்களின் பின்னர் வெளியாகிய மதகஜராஜா திரைப்படத்தின் பின்னர் இயக்குநர் சுந்தரசியின் மவுஸ் அதிகரித்துள்ளது. இவரை தேடி பல முன்னணி நடிகர்கள் படம் நடிப்பதற்காக செல்கின்றனர். இப் படத்தின் வெற்றியின் பின்னர் சுந்தர்சி நயன்தாராவினை வைத்து மூக்குத்தி அம்மன் 2 எனும் படத்தினை இயக்கி வருவதாக தெரியவந்துள்ளது.


மேலும் இவர் இப் படத்தினை முடித்துவிட்டு உடனடியாக நடிகர் கார்த்தியை வைத்து படத்தை இயக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக குறிப்பிடப்படுள்ளது. மேலும் இப் படத்தினை சுந்தர்சி தயாரிக்காமல் கார்த்தியின் நெருங்கிய தயாரிப்பு நிறுவனமான prince pictures லட்சுமணன் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


மேலும் சுந்தர் சி விஷாலை வைத்து படம் பண்ணுவதாக கூறியிருந்தார். இப்போது விஷால் சம்பளத்தினை அதிகமாக கேட்டு வருவதால் எந்த தயாரிப்பாளர்களும் சம்மதிக்காமையினால் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் நயன்தாரா படம் முடிந்ததும் கார்த்தி படத்தினை தொடங்கவுள்ளார்.

Advertisement

Advertisement