• Dec 26 2024

மது போதை சர்ச்சை... சர்ச்சைக்கு பின் எடுத்த சபதம் ... அது நடந்த பிறகு தான் திருமணம்... நடிகை ஸ்ரீ திவ்யா பகிர் தகவல்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சினிமா நடிகை ஸ்ரீதிவ்யா "ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.


ஈட்டி, ஜீவா, காக்கி சட்டை ஆகிய படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய துவங்கிய, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் வரவேயில்லை. இதற்கு காரணம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இமான் அண்ணாச்சியின் வீட்டு கிரகபிரவேசத்தில் அதிகமாக மது அருந்திவிட்டு மோசமாக ஆட்டம் போட்டாராம் ஸ்ரீதிவ்யா. அங்கிருந்தவர்கள் கூறியும் கேட்டாமல் தொடர்ந்து ஆட்டம் போட்டுள்ளார்.

இதன்பின் போதை தெளிய வைத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்பின் தான் நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில், குடிபோதை சர்ச்சையினால் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விட்டதே என வருத்தத்தில் இருக்கும் ஸ்ரீதிவ்யா, சபதம் ஒன்றை எடுத்துள்ளாராம்.


சினிமாவில் விட்ட இடத்தை பிடித்து, முன்னணி நடிகையாக மாறிய பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என சபதம் எடுத்துள்ளாராம். அதுவரை திருமணம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை என உறுதியாக இருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.

Advertisement

Advertisement