• Dec 25 2024

உடம்பு சரியில்ல... சுத்தமா முடியல 3 நாளா... ராமன், ராவணன் யார் ஆண்டாளும் நாங்க உழைச்சா நமக்கு சோறு... பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்ட வீடியோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி தனது இன்ஸ்ராகிராமில் ஒரு வீடியோவை ஷேர் செய்து தனக்கு உடல் நிலை சரியில்லை என தெரிவித்துள்ளார்.


பிரபல சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் இவர் இல்லை என்றால் கதை நகராது என்ற அளவிற்கு ஒரு கதாபாத்திரம் இருக்கு என்றால் அது பாக்கியா, எழில் மட்டும் இல்லை முக்கிய நடிகரான கோபியும் தான். இந்தக்கதையில் ஒரு திருப்பமாக ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி அங்கு மாட்டி தவிக்கு சுவாரஷ்யமான நிகழ்வுகளுடன் கதை நகர்ந்தது. 


இதனிடையே பிறகு செழியன் குடும்ப விவகாரம், எழில் குடும்ப விவகாரம் என கதை நாளா பக்கமும் பல சுவாரஷ்யங்களை விறுவிறுப்பாக தந்தவண்ணம் உள்ளது. இப்போது மகா சங்கமம் என்ற பெயரில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் பாகம் 2 ஓடிக்கொண்டிருக்கிறது.


சுவாரஷ்யமாக நகரும் இந்த மகா சங்கமம் இன்னும் சில நாட்களில் நிறைவடைந்து மீண்டும் தனி தனி சீரியலாக ஒளிபரப்பாகும். இந்நிலையில் கோபி வெளியிட்டுள்ள வீடியோவில் "சங்கமம் முடிந்து 3 நாள் நல்லா சாப்பிட்டு தூங்கலாம்னு பார்த்தா 3 நாளும் ஷூட்டிங் அதுனால உடல் நிலை கொஞ்சம் சரி இல்ல. நாட்டுல பல பிரச்சினைகள் ஓடிக்கொண்டு இருக்கு நான் ஒன்று சொல்லுறேன் ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் நாங்க உழைச்சாத்தான் சோறு வேற யாரும் தரமாண்டான் நமக்கு. மைக்க எடுத்து பேசுனா மட்டும் சாப்பாடு கிடைக்காது உளச்சி சாப்பிடணும் உங்களுக்கு விளங்கும் ஓகே "  என்று ஷேர் செய்துள்ளார்.


Advertisement

Advertisement